தமிழ் இலக்கணம் - Tamil Grammar Introduction Page
உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நல்வரவு! வணக்கம் வருக! "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு!" - குறள்: 392 என்கிறது தமிழர் திருமறையான திருக்குறள். ஆனால், தற்கால தமிழரில் பெரும்பான்மையினரோ தமிழ் இலக்கணம் கற்பதில் ஆர்வம் காட்டாதோராய் உள்ளனர். அதற்கு தமிழ் இலக்கணம் கற்பது அல்லது கற்பிப்பது கடினமாக தென்படுவதும் ஒரு காரணம் எனலாம். உண்மையில் தமிழ் இலக்கணம் கடினமான ஒன்றல்ல; ஆர்வத்துடன் கற்க முனைந்துவிட்டால், அது பேரின்பம் தரவல்லது . ஆங்கிலம் கற்கும் நாம், ஆங்கிலத்தில் எழுதும் பொழுது, ஒரு எழுத்துப் பிழையேற்பட்டாலும், கவலை படுகிறோம். ஆனால் தமிழில் ஏற்படும் பிழைகளை நாம் ஒரு பொருட்டாகவே கருதாதோராய் உள்ளோம். எம் மொழிதானே எனக் கணக்கில் எடுக்காது விடுவோரும் உள்ளனர். இந்நிலை மாறவேண்டும். இதனைக் களைந்து, எல்லோரும் எளிதாக தமிழ் இலக்கணம் கற்க முகநூலில் உருவாக்கப்பட்டுள்ள பக்கமே "இலக்கணம்" எனும் பக்கமாகும். காலையில் எழுந்ததும் தேனிர் அருந்திய வண்ணம் நாளிதழ் வாசிக்கும் பழக்கம் அற்றுப்போய், முகநூலில் என்ன புதுமையான செய்திகள் வந்துள்ளன எனப் பார்க்கும் க...